மூடிய மண்ணின் அடியாழத்தில் நதியோடிக்
கொண்டிருக்கிறது .
எண்ணிக்கையில் ஐந்து பெண்களிருக்கும் அறையில்
கர்ப்பஸ்த்ரி
இரண்டு யோனியோடிருக்கிறாள்.
சமவெளியின் ஒரு முனையிலமர்ந்து பறவை
எச்சமிடக் காத்திருக்கிறது .
விழும் விதை- பெருவனத்தை கொணரும் .
இத்தாது
மணலில் வெட்டி எடுக்கப்படும்
இரும்பு தாதுவிலிருந்து ஒரு கொலைக் கருவி
.
பிறந்ததிலலிருந்து மறைந்து மறைந்து அவனின்
27வயதின் மேல் விழுந்தது .அக்கொலைப்பழி .
கவிஞர் நரன் சிறுகுறிப்பு
கவிஞர் நரன் சிறுகுறிப்பு