எழுதப்படாத வெற்றுப்பக்கத்தின் மேல்
எவ்வளவு பனி நிறைந்திருகிறது -முழங்காலளவு .
துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டவுடன் தான்
அவ்வளவு கொக்குகளும் கலைந்தன .அதிலிருந்து .
உறங்கும் வெள்ளை முயலின் பத்திரிக்கை சித்திரம்
வெளியாகியிருந்தது அதில் .
தலை - கால் வெட்டப்பட்ட ஆனால் அங்கியணிந்த ஒரு
பாதிரி .
முக்கோண உப்பளங்கள் ,
ஒன்றின் மேலொன்றாய் '' ப்ராய்லர் கோழிகள் .''
அதனருகில் வேறொரு வெற்று பக்கம்
இரவு பேயாய் நடமாடியவளின் கலைத்து போட்ட வெண்
துகில்
அதை நீக்கி பார்த்தால் வதை முகாமில் இடைவெளி
இன்றி அடுக்கப்பட்ட ஏழாயிரத்து பதினோரு
குழந்தைகளின்
எலும்பு துண்டங்கள்
அதன் மேல் மூன்று பச்சை வெட்டுக்கிளிகள்
எழுதபட்டோ , வரையபட்டோ
,
உயிருடன் ,நிறுத்தப்பட்டோ அல்லது வகைகொன்றாய் .
வெள்ளை நிற வெட்டுக்கிளிகள் எதற்கும் அஞ்சுவதில்லைகவிஞர் நரன் சிறு குறிப்பு