நாயைக் கண்டால் விரட்ட ஓடுகின்றாள்
காக்காவைக் கண்டால் பறக்க துடிக்கின்றாள்
பூனையை கண்டால் நன்றாக பேசுகின்றாள்
ஆட்டுக்குட்டியை கண்டால் ஆனந்தமடைகிறாள்
அவளின் பாஷை
பிரபஞ்ச பாஷை.
வாயிருந்தும்
வலியிருந்தும்
வேலை பார்க்குமிடத்தில் மட்டும் தான்
தைத்து வைத்தேன் வாயை
முன்பெல்லாம்.
மகள் பிறந்த பிறகு
இப்பொது பழகி விட்டது
வீட்டிலும்.
காலையில்
9 மணிக்கு கல்லூரிக்கு கிளம்பினேன்.
மனைவி 7 மணிக்கே
அலுவலகம் கிளம்பினாள்.
மதியம் பசியோடு
வீடு திரும்புகையில்
அப்பாவின்
கையிலிருந்து கொண்டே
அம்மாவை தேடுகின்றாள்
காயத்ரி.
ஒரு வேளை
திட்டுவதற்கு தெரிந்திருந்தால்
பிறந்த காரணத்தை அறியுமளவுக்க்கு
திட்டி இருக்கலாம்
அடிக்க தெரிந்திருந்தால்
சிறுமூளை கலங்கும் அளவுக்கு
அடித்திருக்கலாம்
இப்படியும் ஒரு நாள் கழிந்தது.