.ஊசியில் நூலிட்டு வலிக்க வலிக்க தைக்கப்பட்ட உதடுகள்
அதன் மேல் நகரத்தின் சிறந்த தையல் கலைஞரொருவரல் பூ வேலைப்பாடு
’’ எம்ப்ராய்டரி
’’
கண்கள் தோண்டப்பட்ட பெரும் பள்ளத்தை
’’ ரே -பான் ‘’கருங்கண்ணாடிகள் மறைக்கும்.
பாதம் துண்டிக்கப்பட்ட கால்களில் நைகி சப்பாத்துகள்
.உடலெங்கிலுமிருக்கிற சவுக்கடி விளறுகளை களை
மறைக்கவென ‘’ ரீ
போக் ‘’ ஆயத்த ஆடைகள்
அரசு அறிவித்தது .
.எம்மக்கள் எவ்வளவு உயர்ந்த வாழ்கையை வாழ்கிறார்கள் .இங்கே .
சுவரில் தொங்கும் பெண்ணின் ஓவியம் 19-ம் நூற்றாண்டினுடையது .
அதன் கீழே மர மேசை யொன்று
அதன் மேலொரு மதுப்போத்தல் .
அதுவும் 19-ம் நூற்றாண்டினுடையது .
சம வயதென ஓவியத்திலிருக்கும் பெண்
தன உதட்டோடு மதுப்போத்தலின் உதட்டைப் பொருத்தி உறிஞ்சக்கூடும்.
(நான் அறிந்து போத்தலின் மூடியை திறக்காமலே மதுவருந்தக்கொடிய கூடிய திறனாளியவள் )
துடைத்தழிக்க வேண்டும் . அவளின் உதட்டை
.துடைப்பானை எங்கே ?