ரசிகனாய் இரு - அகில் குமார்



      
                 
தலைவா என்று கத்து
தடுப்பவனை கெட்ட வார்த்தையில் திட்டு
தலைவனைப் போல் புகையிடு
தலைவனைப் போல் நடையிடு
தலைவனைப் போல் காதலி
தலைவனையே காதலி
உன்னை நீ இழ
தலைவனைப் பரப்பு

தலைவனைப் போல் நடி
தலைவனைப் பிரதியெடு
ரசிகர் மன்றம் வை
தலைவனை சந்தி
கையெழுத்து கேள்
படம் எடுத்து மாட்டு
தலைவனுக்காய் சண்டையிடு
சிறையில் கிட
தலைவனை வாழ வை
நீ செத்துப்போ