முழுக்குடிகாரன் ஒருநாள்
நிலை குலைந்த போது
முதன் முறையாக நிம்மதியாகக் குறட்டைவிட்டுத்
தூங்கியது அது.
பின் காலையில் கைக்குழந்தையோடு வரும்
கைவிடப்பட்ட பெண்ணிடம்
பேசத் தயங்குகிறது
ஏறிச்சாடியாடும் ஆட்டுக் குட்டிகளிடம்
தன்னை ஒப்படைக்கிறது
வேட்டை நாய்களை
ஆயத்தப்படுத்துகிறது
சுற்றித் தயாராகும் அவை
அதனையும் நாயெனக் கருதி
வேட்டைக்கு அழைக்கின்றன
அப்போது சிமெண்ட் பெஞ்சில் படியும்
நாயின் சாயல்
தனியே வந்தமர்ந்து
தனது கதை பேசிக்கொள்ளும் முதிர்கன்னிக்கு
தனது கதை சொல்லும்.
இருவருமே தங்கள் தங்கள் கதை சொல்பவர்களேயன்றி
பிறர் கதை கேட்பவர்களல்லர்.
இருவர் கதைகளையும்
புற் புதர்களும்
வேம்பும்
மதிய வெயிலில்