நாடகங்களின் நடிப்பு - ராம்பிரசாத்




ஒரு நாடகத்தில் நடிப்பது குறித்து 
உங்களுக்கு தெரிந்திருக்கலாம்...

நாடகமே 
நடிப்பது குறித்து
உங்களுக்குத் தெரியுமா?...


நடிகர்களின் பார்வையில்
ஒவ்வொரு நாடகமும்
நடிக்க‌த்தான் செய்கிறது...
நடிகன்
நாடகத்தின் நடிப்பில்
மயங்கி விடுகிறான்...

நாடகத்தின் போக்கை
உண்மை என்று 
நம்பிவிடுகிறான்...

இங்ஙனம்,
நடிகனை ஏமாற்றுவதில்
நாடகங்கள் 
எப்போதுமே தோற்பதில்லை....


கவிஞர் ராம்ப்ரசாத் சிறு குறிப்பு