1)
உன் மெளனத்தை
எல்லா வகையிலும் கீறிப் பார்க்கிறேன்
எனக்குள் பெருகும் வார்த்தைகளை
இனி யாரிடம் ஒப்படைப்பது
ஒவ்வொரு மழைத்துளியிலும்
உன்னுடன் நனைந்த சொற்கள்
நிராதரவாக நிற்கக் கூடாது தானே?
பிழைத்திருத்தம் செய்ய வேண்டி
காத்துக் கிடக்கிறது
பல முத்தங்களும் கூட...
உடைக்க முடியாது எனவே
பொத்தி வைக்கிறாய்..
உன் நிசப்த வெளி முழுவதும்
ஓங்காரமாய் நிறைந்தவளை
ஒப்புக் கொள்ள மறுக்கும்
உன் பிடிவாதத்தையும்
சேர்த்து தான்
சினேகிக்கிறேன்
பேச உலகளாவிய
விஷங்களை சேகரித்துள்ளேன்
சோற்றுப் பானைக்குள் இருக்கும்
ஒற்றைப் பருக்கையை
தீண்டிக் கொண்டிருக்காதே....
உன் மெளனத்தை
எல்லா வகையிலும் கீறிப் பார்க்கிறேன்
எனக்குள் பெருகும் வார்த்தைகளை
இனி யாரிடம் ஒப்படைப்பது
ஒவ்வொரு மழைத்துளியிலும்
உன்னுடன் நனைந்த சொற்கள்
நிராதரவாக நிற்கக் கூடாது தானே?
பிழைத்திருத்தம் செய்ய வேண்டி
காத்துக் கிடக்கிறது
பல முத்தங்களும் கூட...
உடைக்க முடியாது எனவே
பொத்தி வைக்கிறாய்..
உன் நிசப்த வெளி முழுவதும்
ஓங்காரமாய் நிறைந்தவளை
ஒப்புக் கொள்ள மறுக்கும்
உன் பிடிவாதத்தையும்
சேர்த்து தான்
சினேகிக்கிறேன்
பேச உலகளாவிய
விஷங்களை சேகரித்துள்ளேன்
சோற்றுப் பானைக்குள் இருக்கும்
ஒற்றைப் பருக்கையை
தீண்டிக் கொண்டிருக்காதே....
2)
சொற்களை ஒன்றிரண்டு தானியமாக்கி
கூட்டுக்குள் ஒடுங்கச் சொல்கிறாய்
உடன் வருதல் இயலாது
சேகரிப்பதும் பிடிக்காது
இதற்கு முன்பும் இப்பள்ளத்தில்
சில முறை விழுந்துள்ளேன்
மீண்டெழுதலின் சாத்தியங்கள் யாவும்
அச்சமயங்களில் கற்றுக் கொண்டேன்
இந்நிமிட பரிவைக் கூட
நிராகரிக்கவே செய்கிறேன்
அகண்ட நிலவெளி
நீள் பயணம்
இனி தான் தொடக்கம்..
3)
அதி காலைகள் எத்தனை அற்புதமானவை
அந்தி மாலையையும் இப்போதெல்லாம்
தரிசிக்கிறேன்
நிலவையும் நட்சத்திரத்தையும் மட்டும்
உணர்ந்தவளுக்கு
பகல் என்பது ஆயிரமாயிரம்
சந்தோஷப்புள்ளிகளை
மனதுக்குள் நிரப்புகிறது
இன்று பரிசாய் கிடைத்த
நாளினை உன் முன் நீட்டுகிறேன்
புன்னகையுடன் பெற்றுக்கொள்
மற்றும் ஒரு மலராவேன்
கவிஞர் உமா சக்தி சிற குறிப்பு