வாசகர் கடிதங்கள்




இன்மையிதழின் முதல் இதழ் கண்டேன். சிறப்பாக வந்திருக்கிறது. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
எனது கவிதைகள் சிலவற்றை அனுப்பியுள்ளேன்.
பார்க்கவும்

நன்றி 
இல.சைலபதி



வணக்கம், இன்மை தளத்தின் கவிதைகளை இரண்டு மூன்று நாட்களாக திரும்பத் திரும்ப படித்துப் பார்க்கிறேன். வெளிப்படையாக சொல்வதென்றால் எனக்கு எதுவுமே தெளிவாகப் புரியவில்லை. சில கவிதைகளை மட்டுமே இதைப்பற்றித்தான் பேசுகின்றனவோ என்று யூகிக்க முடிந்தது. எனக்கு ஏன் கவிதைகள் புரியவில்லை என யோசித்தபோது தோன்றியவை இவை, 1. இவ்வகை கவிதைகளை புரிந்துகொள்ள ஒரு தொடக்கநிலை வாசகனாக நான் படித்திருக்கவேண்டிய புத்தகங்கள் பற்றிய அறமுகம் இல்லாமை. 2. பெரிய அளவில் வாசிப்பனுவம் தேவைப்படாத கவிதைகளும் இருக்கலாம். ஆனால் எல்லாமே குறியீடுகளாக இருப்பதால் கவிதையின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள கவிஞரைப் பற்றியும் அவரது சிந்தனைகளைப் பற்றியுமாவது தெரிந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. குறியீடுகளும் புரியாமல் கவிஞரையும் தெரியாமல் இருந்தால் கவிதையை எப்படிப் புரிவது? 3.கவிதை எதைப் பற்றி பேசுகிறது என்று தெரிந்தால் மட்டுமே குறியீடுகளை புரிந்துகொள்ள முடியும் போலிருக்கிறது. இன்மை தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் கவிதைகள் வாசகனுக்கு புரியவில்லை என்றால் அதை புரிந்துகொள்ள வேறு வழியிருக்கிறதாயென தெரியவில்லை. அதாவது இக்கவிதைகள் இணையத்தில் எங்கேனும் விவாதிக்கப்படுகின்றனவா என்பது. ஆனால் மொழிப்பெயர்ப்பு கவிதைகளப் பற்றி கவலப்பட வேண்டியதில்லை. நான் reeta doveன் கவிதையை இணையத்தில் தேடினேன். எனக்கு கிடைத்தது இது. The title of this poem is a reference to the novel"The Secret Garden" by Frances Hodgson Burnett. In the book, Mary Lennox, who moves from India to England, and is thus an outsider, helps a little boy named Colin back to health, teaching him how to walk again in her secret garden after he’s been crippled of a number of years. Once he’s healed, and the two of them go back to the secret garden, and all of the flowers are in full bloom. This poem is about a sickly woman, who is cured by a man’s love. The speaker is presumably lovesick, but the presence of love brings her back to health. The man comes with “white rabbits in [his] arms” (2), which are symbols of healing and life. Their light color represents the positive. Next, doves “scattered upwards, flying to mothers” (2-3), which symbolizes that the man brings hope, peace, and most importantly, love. Finally, in the last line if the first stanza, the speaker brings up “the snails [that] sighed under their baggage of stone” (4), which represents strength and voracity. Futhermore, the shape of the snail’s shell, a spiral, represents the cyclical journey of a human through life, death, and rebirth. The snail’s shell is geometrically perfect, which symbolizes the amazing power of the natural. As the couple in the poem makes love, the woman comes back to life, and in return, takes life away from cabbage at it “darkens in its nest” (6), and from the cauliflower as it “turns greenish-white in a light like the ocean’s” (8). The symbolism of those foods losing their color and a bit of life in wake of the speaker’s rebirth shows just how alive she feels through her sexuality. She is so overcome by her arousal that she says, “I am being wooed. I am being conquered by a cliff of limestone that leaves chalk on my breasts” (11-12), which shows that her experience is so influential that it leaves a mark on her forever. இதைப் படித்ததும் எனக்கு மிஞ்சியது எரிச்சலும் இயலாமையும் தான். நான் எவ்வளவு முயன்றிருந்தாலும் புரிந்து கொண்டிருக்கவே மாட்டேன். இந்த குறியீடுகளையெல்லாம் எப்படித்தான் புரிந்துகொள்வது. கவிதைக்கென இணைய இதழ் நடத்தும் தாங்கள் என் போன்ற எளிய வாசகர்கள் பயன்படும் வகையில் ஒரு தொடர் எழுதலாமே. பி.கு) ஒருவேளை இக்கடிதத்திற்கு உங்கள் facebook அல்லது வலைப்பூ மூலமாக பதிலளிக்க விரும்பினால் என் பெயரைக் குறிப்பிட வேண்டாமென மிகுந்த அன்புடனும் சற்று சங்கோஜத்துடனும் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் நேரத்திற்கு
நன்றி. அன்புடன், வின்ஸ்.