தற்கொலை செய்து கொள் - மு.கோபி சரபோஜி




நானும்
நானும்
சந்தித்து கொள்வதற்கான தருணங்கள்
வெகு அபூர்வமாகவே அமைகின்றன.


சொற்ப ஆயுளுடன் அமையும்
அத்தகைய தருணங்களில் எல்லாம்
ஏதாவது ஒரு நான்
எவர் வழியாவது இடம் பெயர்ந்துவிடுகிறது.

தனித்து விடப்பட்ட நான்தான்
நானா? என்ற சந்தேகம்
சூலியாய் மாறி
சூறையாடி விடுகிறது எஞ்சிய பொழுதுகளை……..

இனி ஒரு தருணத்தில்
நான்இரண்டும் சந்திக்கும் போது
இரக்கமின்றி சொல்லி விட வேண்டும்

யாராவது ஒருவர்
தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று!