அந்த நினைவினூடே வரும்
சங்குப்பூவினுடய
மணத்துடன் நான்
மேற்கொண்டு நடக்கையில்
அதிசீக்கிரத்தில்
தற்காலத்தின் வலி.
அன்பின் கடவுள்களாக
இருந்த காலத்திய
நெருக்கங்களின் தாமதத்
தாக்கம்.
முன்னே சென்ற
முன்னேற்றங்களுக்குப்
பின்னால் உயிருக்கு
வழிவிட்டு நான்.
தாமதமாகத்தான்
தெரிந்தது அது
கொடியிலிருந்து தவறிய
சங்குப்பூவினுடய மணம்
என்று.