1)
ஒளிபுகா அடர்வனத்துள்
காத்திருக்கிறேன்
பேச்சின்றி
வெகு காலம் கழித்துதான் வந்தாய்
ஏனிப்படி? என்ன நேர்ந்தது?
தொலைத்த இடத்தில் தேடாமல்
எங்குச் சுற்றித் திரிந்தாய்?
பதில் சொல்லாமல்
கை பிடித்து அழைத்துச் சென்றாய்
கரைகள் இல்லாத ஓர்
ஆழ்கடலுக்குள்
ஒளிபுகா அடர்வனத்துள்
காத்திருக்கிறேன்
பேச்சின்றி
வெகு காலம் கழித்துதான் வந்தாய்
ஏனிப்படி? என்ன நேர்ந்தது?
தொலைத்த இடத்தில் தேடாமல்
எங்குச் சுற்றித் திரிந்தாய்?
பதில் சொல்லாமல்
கை பிடித்து அழைத்துச் சென்றாய்
கரைகள் இல்லாத ஓர்
ஆழ்கடலுக்குள்
2)
நீ எனக்காகப் பருகத் தந்த
மதுவின்
முதல் துளியில்
காதல் இருந்தது
இரண்டாம் துளியில்
காமம் இருந்தது
கடைசி துளியில்
எல்லாம் முடிந்தது
உன்னுடைய போதை
தலைக்கேறி
இறங்கியதும்
எந்த சாதுர்யமும் அறியாத
நானும் கீழ் இறக்கப்பட்டேன்
மதுவின்
முதல் துளியில்
காதல் இருந்தது
இரண்டாம் துளியில்
காமம் இருந்தது
கடைசி துளியில்
எல்லாம் முடிந்தது
உன்னுடைய போதை
தலைக்கேறி
இறங்கியதும்
எந்த சாதுர்யமும் அறியாத
நானும் கீழ் இறக்கப்பட்டேன்
3)
உதற உதற ஒட்டிக் கொள்கிறது
அந்த மணற் துகள்
யாருக்கும் தெரியாமல் சில சமயம்
காட்டில் பெய்து ஓய்கிறது மழை
எல்லா ரகசியங்களின் முடிவிலும்
மறைககப்படுகிறது சிறு துளி உண்மை
அந்த மணற் துகள்
யாருக்கும் தெரியாமல் சில சமயம்
காட்டில் பெய்து ஓய்கிறது மழை
எல்லா ரகசியங்களின் முடிவிலும்
மறைககப்படுகிறது சிறு துளி உண்மை
