வெற்று இடங்கள்
காத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத சோகம்
எங்கே செல்ல காத்திருக்கும் என்றரியாத வயது,
ஓடி அலறும் மக்களுக்கு தெரியாத சோகம்
அந்த நொடி ஏமாற்றி போகும் என்பதறியாத உணர்வு
சிதறல்கள்,
சோகங்கள் கூட கூட்டமாய் வந்தால் தான் மரியாதை
இல்லையெனில் அதற்காக மாறும் பாதை,
முன்னிரவு விளையாடி சென்றவன் கருகி
சிறகின்றி கிடக்க பார்த்தும் பார்க்க மறுத்த
இதயம்,
அன்றிலிருந்து வீதியில் வாதம் செய்யவும்
கேட்கா விட்டால் வீதியில் வதம் செய்யவும்
துணிந்தவர்கள் பெற்றவர்கள் அல்ல
அவர்கள் வெற்று இடங்கள் என புரிந்த
தருணம் பீரி எழுந்தது எங்கோ இருந்த
என் அழுகை...