3
மூட்டமான பார்வை வழி நகரம்.
மதியத்தின் கெட்டியான லென்ஸின் கீழ்
இச்சை, மெழுகுவர்த்தியை விட வேகமாய்,
எரிகிறது, நம் தேகங்களின் கண்ணாடியை
புகைத்தபடி.
பார்வை மூட்டம் கலைகிறது.
மாலை நம் பார்வையை சிதைக்கிறது:
பகலின் கற்கள் பேய்கள் ஆகின்றன.
ஆனால் இருளில், கைகளும் உதடுகளும்
அடையாளம் வைத்து விட்டன
நாம் தொட்ட இடங்களில்.
அரைநாளின் அதிகாரபூர்வ பயன்பாட்டுக்கு பின்
அலம்பி காய வைத்த பாத்திரங்கள் போல
அசைவற்று இப்போது.
5
அவற்றை தொடுவதென்றால்
நான் முழுக்க விரல்களாவேன். அவற்றின் முழுமையில்
கிளர்ச்சியுறும் கண்கள் நிலைகுத்துகின்றன.
ஒரு முலைக்கணு உறுதிப்படும்
என் நாவில். இங்கு
இன்பம் ஒரு நீள்வளையம், பரிபூரணம்.