வீடு திரும்புதல் - ஆர்.பார்த்தசாரதி (ஆர்.அபிலாஷ்)



10
மாலையில் தெரு வீட்டை நோக்கி மெல்ல சாயும்
போக்குவரத்து குவிந்திட.
அப்போது தான் நான் அசைவு கொள்வேன்.

மேஜையில் இருந்து எழுந்து
கண்களில் இருந்து தூசை உதறுவேன்.
கண்ணாடியை எடுத்தணிந்து

இரவின் ஒவ்வொரு மூலையிலும்
என்னை தேடுவேன். என் காலடிகளைக் கேட்டு
நடைபாதை ஒற்றனாகும். குறுக்குசந்தை எடுத்து

என் முகத்தில் அறையும் ஒரு தெருநாய்.
இந்த உலகை கைமாறினேன்
ஒரு நாற்காலி மற்றும் மேஜைக்காக.
நான் புகார் சொல்லக் கூடாது தான்.