நீண்ட நாட்களுக்குப் பின் - சுதீர் செந்தில்




இப்போதெல்லாம்
கவிதை எழுத வேண்டுமெனத் தோன்றுவதில்லை

ஒரு நாளைக்கு
ஒன்பது முறை
சிறுநீர் கழிப்பதுபோல
கவிதைகள் எழுதுபவர்களை உங்களுக்குத் தெரியும்

யானை லத்தி போட்டதுபோல
இன்னும்
பன்றி குட்டிகள் போட்டதுபோல
கவிதைகளை ஈன முடிவதில்லை

முக்கி முக்கி எழுதினால்
ஆட்டுப் புழுக்கையென
ஏதோ எழுதமுடியும்.

ஆலம் பழத்திற்கும்
ஆட்டுப் புழுக்கைக்கும் ஓர் பந்தம் உண்டு
மேலும்
கவிதைக்கும்

ஆலம் ஆயிரம் வருடங்களுக்குமேல் உயிர்த்திருக்கும்.
ஆட்டுப் புழுக்கையை கரைத்துக் குடித்தவனுக்கு ஆயுசுகெட்டி
அமுதத்தை குடித்ததுபோல

அமுதாவும் ஓர் ஆட்டை வளர்த்தாள்
நல்ல கிடா அது
அந்தக் கிடாவுக்கு ஒரு தபசியின் ஆசியால்
அமுதாவிடம் மட்டும் பேச இயலும்

மேலும்
கிடாவுக்கு சொர சொரப்பான நீண்ட நாக்கு வேறு
அமுதாவும் கிடாவும் அமுதத்தை அருந்தி
களைத்து போய்க் கொண்டிருக்கையில்
அத்துமீறி அமுதன் நுழைந்து விட்டான்
எதையும் காணாததுபோல் பேசத்துவங்கினான்

அமுதா என்றழைத்தவனிடம்
பதற்றமின்றி போன காரியம் முடிந்ததாவென கேட்டாள்
அமுதனோ
உனக்கென்ன அத்தனை பசி
கிடாவிடம் பசியாறிக் கொண்டிருக்கிறாய் என்றான்

அவளோ

அமுதன்
நீயின்றி உறக்கம் பிடிக்கவில்லை
உறக்கம் வேண்டி ஒன்றுக்கு இரண்டு
அல்ப்ராக்ஸை விழுங்கினேன்

ஏனோ
உறக்கமும் பிடிக்கவில்லை
விழிப்பும் அகலவில்லை
ஒரே மயக்கம்

பின் கதவைத் திறந்து பார்க்கையில்
பக்கத்து வீட்டு பசுமாடு
பெருத்த மடியுடன்
உருவம் சிறுத்து காணப்பட்டது

பசியின் மயக்கத்தால்
பா... பா... என்றேன்

ஏதோ இதற்காகவே காத்திருந்ததுபோல
பாய்ந்து வந்து என்னுள் புகுந்தது

நான் இன்பத்தில் ஆழ்ந்தேன்
அறிவு விழித்தபோது அத்தனை தாகமேடுத்தது
பால்மடியை உறிஞ்ச தொடங்கினேன்

நீயோ பசுவை கிடாவென்கிறாய்
இன்றைக்கு
நான்
குளியறையில் நிர்வாணமாக இருக்கையில்
என்மீது
ஓர் ஆண் பல்லியின் எச்சம் விழுந்த
என் அந்தரங்கத்தை நனைத்தது

சகுனம் சரியில்லையென
உள் பாவாடையை மார்பில் இறுகக் கட்டி
வெளியேறுகையில்

ஓர் அண்டைங்காக்கை
என் நிர்வாணத்தை பார்த்ததுபோல
சுய மைதுனம் செய்து கொண்டிருந்தது

வெகுவாக பதட்ட மடைந்தபடி
உன் நினைவாக
உனக்கு பிடித்த
நிலநிற கௌபீடத்தையும்
சிகப்பு நிற மார்புக்கச்சையையும்
பச்சைநிற மேலாடையையும் உடுத்தி
காத்துக் கொண்டிருந்தபோது...

நீ
இங்கு வந்தபோது பார்த்தது
நிகழ்ந்துவிட்டதென புலம்பினாள்

மோகத்தின் அவசரத்திலிருந்த அமுதனிடம்
அவள்
கொஞ்சம் பொறுமையாக இரு
உனக்கு
என் மீதிருக்கும் நம்பிக்கை புரிகிறது

நீ பார்த்தது எதையும் நம்பவில்லை என்பதையும்
அப்படியிருந்தாலும் அது உனக்கு பொருட்டல்ல என்பதையும்
புரிந்து கொண்டேன்

கொஞ்சம் பொறு
எதுவாக இருப்பினும்
குளித்துவிட்டு வந்து விடுகிறேன்

என சிணுங்கியபடி ஆடைகளை களையத் துவங்கிளாள்.


(
யவனிகாஸ்ரீராமுக்கு)