என்னால் சரியாக சொல்ல முடியவில்லை
- -- ஷேரன் ஓல்ட்ஸ்
அந்த பேருந்தில் இருந்து குதித்தேனா
என என்னால் சரியாக சொல்ல முடியவில்லை,
ஓடிக் கொண்டிருக்கும் அப்பேருந்து,
கையில் குழந்தையுடன்,
ஏனென்றால் எனக்கு தெரியாது. என் கதையை
தான் நான் நம்பினேன்:
நான் விழுந்து விட்டேன், அல்லது
காற்றில் ஒரு கால் நின்றிருக்க
பேருந்தை சட்டென எடுத்து விட்டார்கள்.
என் முகவாய் முறுகியது,
என் நிறுத்தத்தை தவற விட்டதன் எரிச்சல்,
காற்றில் இறங்கி கால் வைத்தது,
தெருவில் ஒற்றை முட்டி பதிய நான்
குதிக்கையில்
காற்றில் பராக்கு பார்க்கும்
துலக்கமான குழந்தை,
முட்டி சிராய்ந்தது, திரும்பியது,
பேருந்து கிரீச்சிட்டு நின்றது,
ஓட்டுநர்
குதித்து இறங்கியது, என் மகள் சிரித்தது
நினைவில் இல்லை.
இன்னும் ஒரு முறை யோசிக்கலாமா.
மீண்டும் ஒருபோதும் நான் அப்படி செய்யவில்லை,
மீண்டும் ஒருபோதும் நான் அப்படி செய்யவில்லை,
ரொம்ப கவனமாய்
இருந்திருக்கிறேன்.
அந்த அழகான இளம் அம்மா மீது
ஒரு கண் வைத்திருக்கிறேன்,
அவள் சன்னமாய் துள்ளி
இறங்குகிறாள்
நகரும் வாகனத்தில் இருந்து
நிலைத்த தெருவுக்குள், அவள்
வாழ்வு அவள் கைகளில்,
அவள் வாழ்வின் வாழ்வு அவள்
கைகளில்