அவை வட்டமிட்டு வட்டமிட்டு வரும்.
அருகில் தொங்கும் கனத்த திரைச்சீலைகள்
அழகான வெளிக்காட்சி கொண்ட ஒற்றைக்கண்ணாடி ஜன்னலையும்
எப்போதும் புன்னகைத்து, எங்களை மகிழ்ச்சியாயிருக்க கேட்கும்
அம்மாவையும் மறைக்கும்
அவள் சொல்வாள் ‘மகிழ்ச்சியாய் இரு ஹென்ரி!’
அவள் சொன்னது சரிதான். முடிந்தவரை மகிழ்ச்சியாய் இருத்தலே நல்லது.
ஆனால் எங்கள் அப்பா அவளையும் என்னையும் தொடர்ந்து
வாரத்தில் பலமுறை அடிப்பார்
தனது ஆறடி ரெண்டங்குல உருவத்துள்
தன்னை தாக்குவது எது என அறியாத பெருங்கோபத்தில்.
என் அம்மா, பாவப்பட்ட மீன்,
மகிழ்ச்சியாய் இருக்க விரும்புகிறவள்,
வாரத்தில் ரெண்டு மூன்று முறையாவது அடி வாங்குபவள்,
என்னிடம் மகிழ்ச்சியாய் இருக்க சொல்லுவாள்:
‘புன்னகைத்திடு ஹென்ரி.! நீ ஏன்
ஒருபோதும் புன்னகைப்பதில்லை?’
பிறகு அவள் புன்னகைப்பாள், எனக்கு அதை எப்படி என காட்டுபவள்
போல;
என் வாழ்வில் நான் பார்த்த ஆக சோகமான புன்னகை அது தான்.
ஒருநாள் எல்லா தங்கமீன்கள் செத்துப் போயின, ஐந்துமே,
அவை வயிற்றைக் காட்டியபடி, கண்கள் அப்போதும் திறந்திருக்க,
நீரில் மிதந்தன;
அப்பா வீட்டுக்கு திரும்பியதும் அவற்றை
சமையலறை தரையில் பூனைக்கு வீசினார்;
நாங்கள்
பார்த்தோம் அம்மா புன்னகைக்க