- அடி வாங்கி ஈனத்தனமாய் அடங்கிப் போக விடாதே உன் வாழ்வை
- கவனித்து காத்திரு
- மேலெழ வாய்ப்புண்டு
- எங்கோ ஒளிக்கீற்று தெரியலாம்
- அது ரொம்ப வெளிச்சமொன்றுமல்ல தான்
- ஆனால் இருட்டை அழிக்க போதுமானது
- கவனித்து காத்திரு
- கடவுள்கள் உனக்கு வாய்ப்புகள் அளிப்பார்கள்
- அவற்றை உணர்ந்திடு
- பயன்படுத்து
- உன்னால் மரணத்தை வெல்ல முடியாது ஆனால்
- வாழ்க்கையில் மரணத்தை வெல்லலாம், சிலவேளை.
- எவ்வளவு அதிகமாய் இதைச் செய்ய கற்கிறாயோ
- அவ்வளவு அதிகம் வெளிச்சம்
- உன் வாழ்வில்
- உன் வாழ்க்கை உன்னுடையது,
- வாழ்க்கை இருக்கும் போது அதை உணர்ந்திடு.
- நீ அற்புதமானவன்
- உன்னில் ஆனந்தம் கொள்ள
- கடவுள்கள் காத்திருக்கிறார்கள்.