(தமிழில்
கலாப்ரியா,ஆங்கில மொழி பெயர்ப்பு: ஜான் மெக்லைன், நன்றி, கவிதா ஆசியா, பாரத் பவன்
வெளியீடு 1990, போபால்,
1
நான் வெறுமனே
நினைக்கிறேன்
நான் வெறுமனே உன்னைக்
காதலிக்க மட்டும்
நினைக்கிறேன்:
வார்த்தைகளால்
வெளிப்படுத்த விரும்பவில்லை
ஏனெனில் தூண்டுதலால் தீ
சாம்பலாக மாறிவிடும்
நான் வெறுமனே உன்னைக்
காதலிக்க மட்டும்
நினைக்கிறேன்:
சைகைளில் தெரியப்படுத்த
விரும்பவில்லை
ஏனெனில் கருக்கொண்ட மேகம்
பொழிந்து தீர்ந்துவிடும்
2
நாம் மூன்று பேர்:
இந்த அறையினுள், நாம் மூன்று
பேர்:
நான், கத்தி, மற்றும்
வார்த்தை-
உனக்குத் தெரியும், அதன்
கூர்மையில் பசிய ரத்தம் இருக்கையில்
கத்தி ஒரு கத்தி மட்டுமே
அது என் ரத்தமா அல்லது
வார்த்தையின் ரத்தமா என்பது
ஒரு விஷயமில்லை
3.
வார்த்தைகளைக் கடந்து
நாம் கண்டு கொள்வது என்ன:
ஒரு பூந்தோட்டம்? அளவிட
முடியாப் பெருவெளி?
பூந்தோட்டம், அர்த்தங்களை
நிறைய உணர்த்துவதில்லை
பெருவெளியிலோ,
அர்த்தத்தின் சாரமென்பது சூன்யமே
-