தாங்கள்
சொர்க்கத்தில் இருந்து கொண்டு
பிறர் வாழ்வை
நாசமாக்கிக்
கொண்டிருக்கிறார்கள்
இப்படியும் சிலர்
வந்த
சுசீலா
கேட்டாள்
இன்று
யாரெல்லாம்
உன்னைப் பார்க்க
வந்தார்கள்
க நா சு
வள்ளுவரும் தாமசும்
வண்ணங்கள்
ராபர்ட் ம்யுனில்
யுவன் டோர்லஸ்
ஜெயடேவி
பூனை என்ற
அந்த சிறுகதை
பிறகு
நன் சற்று
தயங்கினேன்
என் தயங்குகிறாய்?
இன்னும் யார் சொல்?
நான் சற்று நேரம் சென்றவுடன்
நீ என்றேன்
சொன்னாள்
இப்படி எல்லாம்
எப்படி யோசிக்க
உன்னால் முடிகிறது ?
சொன்னேன்
யோசிப்பதை
நிறுத்திவிட்டு
நாட்கள் பல
சென்று விட்டன
அவள் என்னைக்
கண் வாங்காமல்
சற்று நேரம் உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தாள்
இது நகுலன் எழுதி இதுவரை பிரசுரம் ஆகாத கவிதை.எனக்கு இதனை வைகறை ராமகிரிஷ்ணன் /பொள்ளாச்சி அளித்தார் ..1995.
ரா பாலகிருஷ்ணன்