என் மனைவியிடம் நான் பிரிவதைச் சொல்ல
காத்திருந்தேன் காத்திருந்தபடியே
திரும்பத்திரும்ப தூக்கத்தில்
சொல்வதற்கான முதல் வாசகத்தை
யோசித்தேன், தூங்காதபடி
என் இதயம் ஒரு தர்பூசணியாக இருக்க
அது ஒவ்வொரு இரவும் கொய்யப்படுகிறது
மூன்று மணிக்கும் மேலாக, வெளவாலாக மாற்றமடைய
என் மனைவி மண்ணெண்ணை விளக்காக இருப்பாள்.
அன்பே, அது ஏதோ ஒன்றால்...
நாம் அந்த நாளில், கரும்பின் தோட்டாக்களில்
சிக்காமல் ஒளிந்தபடி இருந்தோம்
என் மனது ஆகச்சிறந்தவற்றுக்கு எதிரான நகர்தலில்
உன் தொடைகளுக்கு நடுவில் சிக்கியது
நட்சத்திரங்கள் உன்னுள் நீந்தத் தொடங்கினபோது.

அந்த கடைசி நொடி கடந்தது
ஆயினும், ஒரு அங்குலமும் நான் மறக்கவியலாதபடி
உனது இரு கன்னங்களையும் முத்தமிடவேண்டும்
உதடுகளை, நெற்றியையும்
நம் மகனை நான் இழப்பேன்
அவன் சருமத்து மயங்கவைக்கும் சூட்டையும்.
நான் எப்படி அவனை ஏந்துவேன்?
சரியானபடி இருத்தும் பிரயத்தனங்களுக்கு பிறகும்
எப்படியேனும், எழுப்பிவிடாதபடி.

நான் உன்னிடம் சத்தியம் செய்தேன்
ஒளியையும், ஓடும் நீரையும் வைத்து
அந்த விடியலை, நான் சொல்லியே ஆகவேண்டும்
நீ என் தந்தையின் பிரிவை நினைவுபடுத்தினாய்
அந்த பிரிவு ஒரு நீர்ச்சுழல், அது அப்படித்தான்
சலனமற்று உன் சந்தனக் கண்ணுக்குள்
ஊடுருவிப் பார்க்கையிலும்
உன் உப்புக்கரையில் இருந்தபடி நீந்துகையிலும்.