சுருக்கென்றது...
இரத்தம்..
சொட்டு சொட்டாய்.
அன்பாய் அமைதியாய்
உன்னிடம்
உரையாடி மெதுவாய்
பக்கம் திருப்பும்
போது..
உன் பக்கத்தின்
அடையாளங்களை
உள்வாங்கி
அதில் தெரியும் என்
பிரதிபலிப்புகளை
இனிமைகளை
அசை போட்டுக்
கொண்டே
இன்னும் வேண்டும்
என்று
ஆசையாய்
ஸ்ஸ்ஸ்ஸ்...
விரலை விட
மனது வலிக்கிறது..
புத்தகமே
இவ்வளவுதானா உன்
நிஜம்?