பேறு - வேலு முருகன்




ஒரு இனிப்பின்  உறை 
மெதுவாக அகற்றப்படுகிறது... 

விழிகள் வழியே கேட்டு பின்பு
விந்தை வாயின் 
வழியேயும் கேட்கிறேன்
"எனக்கு" என்று...  

"தரமாட்டேன் போ"
என அவள் முடிக்கையில் 
எல்லாப் பேறும் பெற்றவனாகிறேன் 
இனிப்பினைத்தவிர.