இரவு மணி 11,10. - மணிபாரதி



இந்த நிமிடம்
புதிதாய் ஓர் உயிர்
தாயின் வயிற்றிலிருந்து
வெளிவந்து கொண்டிருக்கலாம்,

பிளாட்பார குழந்தையொன்று
உணவு போதாமல்  பசியில்
அழத்தொடங்கலாம்,

பணத்திற்காய் கொலை
செய்பவர்கள் ,ஒரு திட்டத்தை
தீட்டி கொண்டிருக்கலாம்,

மனித நிலை கடந்த ஒருவன்
சாலையோர பைத்தியக்காரியை
வண்புணர்ச்சி செய்து
கொண்டிருக்கலாம்,

இவை பற்றி 
எதுவும் அறியாத சிலர்
உணவு முடித்து பாதுகாப்பாய்
உறங்க போகலாம்,

இந்த நிமிடம் இப்படியும் 
கடந்திருக்கலாம்.