மழை
தூரல் போட
துவங்கியிருந்தது
பூவின்
இதழ்களை
முத்தமிட்டது
முதல்
துளி...
வீசும்
சாரல்
காற்றில்
நகரும்
மேகங்களின்
தொடராய்
மாறிக்கொண்டிருந்தது.
வனம்.
நீ
நிற்கும்
பெரு மரம்
மழையை
வாங்கிக்கொண்டு
உனை
நனையாமல்
பார்த்துக் கொண்டது.
நீ
விழிகளில்
காட்டிய
மோகத்தின்
ஈரத்தில்
மொத்த மரமும்
நனைந்திருந்தது.
மழையின்
தீவிரம்
தற்போது
அதிகமாகிறது...
நீ
சாரலை
உணரவும்
நான்
நீ
நின்றிருக்கும்
மரத்தினை
பார்க்கவும்
சரியாக
இடித்தது
வானம்.
இப்பொழுது
இருவருக்குமாய்
சேர்த்து
இன்னும்
கொஞ்சம்
அதிகமாய்
அழுத்தமாய்
விழுகிறது
மழை.
நம்
மூச்சுக்காற்றின்
உஷ்ணம்
கரைந்து
மழை
மணமாய்
மாற
துவங்குகிறது
மரம்.
நெருக்கங்கள்
கூட
மேகக்கருக்கல்களுக்கு
நன்றி
தெரிவித்தேன்.
வனம்
அந்த
தருணத்தில்
காமத்தை
சுவாசிக்க
பிரயத்தனமாகி
கொண்டிருந்தது.