வீடெங்கும் சிதறிக்
கிடக்கும்
க்ளிப்களை சேகரித்து
துணிகளுக்கு
அணிவிப்பது
எவ்வளவு சிரமமாய்
இருக்கிறது
சில க்ளிப்புகள்
கீழ் வீட்டுக்
கொடிக்கு வேறு தாவிவிடுகின்றன
அவர்கள் வீட்டு
சோஃபாவின் கீழும்
கிடக்கக்கூடும் சில
என்றாலும் சமயங்களில்
பறந்தே விடுகின்றன
துணிகள்
அவை மட்டும் இல்லாமல்
இருந்தால்
எவ்வளவு நன்றாக
இருக்கும் ?